ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்துக்கு காவலர் குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட பவானி மற்றும் சிறுவலூர் காவல்நிலையத்தில் பணி புரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பி.கோபாலகிருஷணன் கடந்த 20.05.2019-ம் தேதியன்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.ஜேம்ஸ் ராபர்ட் கடந்த 25.05.2019-ம் தேதியிலும் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) மூலம் காவலர் குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரத்யேகமாக ரூ.30 லட்சம் பெறப்பட்டது.
கடந்த டிச., 18ம் தேதி, மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பி.கோபாலகிருஷணன் அவர்களின் துனைவியார் சுஜிதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.ஜேம்ஸ் ராபர்ட் அவர்களின் துனைவியார் ஜே.ஹெலன் ரோசலி அவர்களுக்கு கோவை மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா அவர்களால் ரூ.30 லட்சத்திற்கான காசோலை ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
அப்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் மற்றும் ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.