கோவை: கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொடிசியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
கோவை: கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொடிசியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து கொடிசியா தலைவர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது :

எழாவது 'கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொசிடியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் வணிக பெருமக்கள், வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன்படுவார்கள்.
இதுகுறித்து 'கோவை ஷாப்பிங் திருவிழா -2019' வின் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:
புது பொருட்களை பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தவும், வாங்கவும், பொருட்களை தொழில் நிறுவனங்களை விற்கவும் இந்த திருவிழா முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவு, வீட்டு உபயோக பொருட்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விவசாய பொருட்கள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
தினமும் மாலை நிகழ்ச்சிகள் உள்ளன. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, கலை நிகிழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
1.5 லட்சம் சதுர அடியில், 500க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
பெற்றோரும், குழந்தைகளும், நண்பர்களும் சந்தோஷமாக ஷாப்பிங் செய்ய இந்த திருவிழா அமையும்.
இந்திய கைவினை பொருட்கள் துறை மூலம் நேரடி பங்கேற்பு, பழங்குடியினர், மகளிர் சுய உதவி குழுவினரும் நேரடியாக பங்கேற்கிறார்கள்.
இங்கு விற்கப்படும் பொருட்கள் மிக குறைந்த விலையில், தள்ளுபடி விலையில் கிடைக்கும் எனவும் நபர் ஒருவருக்கு நுழைவு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.5 வயது குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. தினமும் 10 ஆயிரம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
இந்த திருவிழாவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் துவக்கி வைக்கிறார். இவ்வாறு பொன்னுசாமி கூறினார்.