கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்துவந்த மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் மாணவன் உடலை எடுத்து சென்றதாக காவல்நிலையத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்துவந்த மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் மாணவன் உடலை எடுத்து சென்றதாக காவல்நிலையத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியை சேர்ந்த குமார் சுமித்ரா தம்பதியினரின் மூத்த மகன் ஹரிஸ். இவர் பத்தாம் வகுப்பு வரை சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், மாணவன் நன்றாக படிக்க வேண்டும் என பதினொன்றாம் வகுப்பு படிக்க காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தில் செயல்படும் வித்யா விகாஸ் என்ற தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர். மேலும் மாணவன் ஹரிஸ் அங்குள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளான்.
பள்ளியில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், தற்போது அரையாண்டு தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் பள்ளியில் இருந்து விடுதிக்கு சென்ற மாணவன் மாலையில் பள்ளி விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் மூலம் காரமடை போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து பள்ளிக்கு விரைந்த காரமடை போலீசார், உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பின்னரே உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை என தகவல் அளித்து வரவழைக்கபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பள்ளிக்கு வந்த ஹரிஸ்ஸின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காரமடை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
உடல் நிலை சரியில்லை என காரணம் கூறும் பள்ளி நிர்வாகம் ஏன் முறையாக பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை எனவும் பெற்றோர்கள் இல்லாமல் மாணவனின் உடலை எப்படி பள்ளியில் இருந்து வெளியே அனுப்பலாம் என பல கேள்விகளை முன்வைத்து காவல்நிலையத்தில் நீதி கேட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.