கோவை: தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது.

அதேபோல, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இதனால் நோய் பாதிப்புகளும் குறைந்தது. ஆனால், தமிழகத்தில், பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளினால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் அதே நோயாளிகள் டெங்கு காய்ச்சலால் மரணிக்கும் போது டெங்கு காய்ச்சல் என எந்த பதிவும் செய்யப்படுவதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 14ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காய்ச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பலியாகினர். இந்த உயிர் பலிக்கு காரணம் டெங்கு காய்ச்சல் என தகவல்கள் வெளியாகியது. ஆனால், நிர்வாகத் தரப்பில் இந்த குழந்தைகளின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டெங்குப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிகள் பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மகள் மித்ரா (11) அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல, கோவை அத்திப்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி மனைவி கமலா (65). கடந்த டிசம்பர் 18ம் தேதி டெங்கு பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கமலா நேற்று இரவு உயிரிழந்தார்.