குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு; சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக மத்திய அரசு இம்மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள்,முஸ்லீம் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டி சட்ட கல்லூரி முன்பு வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் டெல்லியில் மாணவர்கள் ஈடுபட்ட ஆர்ப்பாட்டத்தில் போலீசார் மாணவர்களை தாக்கியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும், டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பதாதைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 22க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...