கோவை: குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கருப்பு கொடி கட்டி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், பொது அமைதிக்கு / பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க முற்படுவோர் மீது கடுமையான, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவினை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில், நாளை கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு இஸ்லாம் அமைப்புகள் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு, கருப்பு கொடியேற்றுதல், பொதுக்கூட்டம், மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படா வண்ணம் கோவை மாநகர காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2500 காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள், கடைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டியதில்லை. யாரேனும் சட்ட விரோதமாக கட்டாய கடையடைப்போ, பேருந்து / இரயில்களை மறிக்கவோ, பொது இடத்தில் எவ்வித அனுமதியின்றி ஒன்று கூடவோ, பள்ளி / கல்லூரிகளை மூடவோ, அரசு அலுவலகங்களை முற்றுகையிடவோ, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ, எந்த விதத்திலும் பொது அமைதிக்கு / பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க முற்படுவோர் மீது காவல்துறை சார்பில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இதர சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.