கோவை: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முல்லை சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த அனைவருக்கும் பணத்தை நீதிமன்றம் மூலம் திருப்பி கொடுக்க இருப்பதாக அதன் உரிமையாளர் குறிஞ்சி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை அரசியல்வாதிகளும், காவல் துறையினரும் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் குறிஞ்சி தெரிவித்துள்ளார்.

கோவை, ஈரோடு, கோபிசெட்டிபாளையம் உட்பட பல்வேறு இடங்களில் முல்லை ஜூவல்லரி, முல்லை சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நகைக் கடை மற்றும் நிதி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்தவர் குறிஞ்சி. இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கொடுப்பதாக விளம்பரம் செய்த நிலையில், ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்நிலையில், இந்த நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றபிரிவில் புகார் அளித்தனர். சுமார் ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இதன் உரிமையாளர் குறிஞ்சி நீதிமன்றத்தில் கடந்த ஜுலை மாதம் சரண் அடைந்தார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் நேற்று ஜாமினில் விடுதலையானார்.

இந்த நிலையில், நிதி நிறுவன உரிமையாளர் குறிஞ்சி கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரூ.500 கோடி நான் மோசடி செய்ததாக சொல்லப்படுவது முற்றிலும் தவறு எனவும், என் மீது 9.5 கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக பொருளாதார குற்ற பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, நான் பணம் வாங்கிய நபர்கள் அனைவருக்கும் பணத்தை முழுமையாக நீதிமன்றம் மூலம் திரும்ப செலுத்த தயாராக இருப்பதாக கூறினார்.
ஆனால், சிலர் அரசியல் கட்சியின் பெயரைச் சொல்லி 50 கோடி,100 கோடி பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகிறார்கள் என குற்றம் சாட்டினார். அவர்கள் சொல்லும் நபருக்கு தான் பணத்தை தர வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டுவதாகவும் இதனால் நிறுவனத்தில் பணம் கட்டிய நபர்களுக்கு பணத்தைக் கொடுக்க தயாராகும் நிலையில், என்னை சிலர் கொலை மிரட்டல் விடுவதாகவும் அதிகம் பணம் கேட்பதாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் செலுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், காவல்துறையில் இருப்பவர்களும் பணம் கேட்டு தன்னை மிரட்டுகின்றனர் எனவும் சம்மந்தம் இல்லாத இடத்திற்கு தன்னை வர சொல்லி நிர்ப்பந்தம் செய்வதாக கூறிய அவர், தான் கைது செய்யப்பட்ட போது தனது நிறுவனங்களில் இருந்த ஒன்றரை கோடி அளவிற்கான நகை, பணம் போன்ற பொருட்களை தற்போது காணவில்லை என்றார்.
அதேபோல, கர்நாடக மாநிலத்தில் தங்கியிருந்த போது விசாரணை என அழைத்துச் சென்ற கர்நாடக போலீசார், தனது காரையும், ஒன்றரை கோடி பணத்தையும் பறித்துக் கொண்டு, வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி வைத்து கொண்டனர் என் குற்றம்சாட்டிய அவர், பணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் பணத்தை முழுமையாக திருப்பி கொடுக்க தான் தயாராக இருப்பதாக கூறினார். மேலும், தாங்கள் சொல்லும் நபர்களுக்கே பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுக்கும் அரசியல் கட்சியினர், கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் புகார் அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.