சாலைகள் அமைக்க பிளாஸ்டிக் கழிவுகளையும் பயன்படுத்த கோவை மாநகராட்சி திட்டம்

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவையில், பிளாஸ்டிக் துகள்களை 5 சதவீதம் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டம்.

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவையில், பிளாஸ்டிக் துகள்களை 5 சதவீதம் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டம். 

கோவை நகரில் 4500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அதில் சுமார் 740 கி.மீ., சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு அமைத்தல், பழுதான மின் கம்பிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கடி சாலைகள் தோண்டுப்படுகின்றன. 

மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகள் மழை காரணமாகவும், பராமரிக்கமால் இருந்ததன் காரணமாகவும் மாநகரில் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இந்தநிலையில், மாநகராட்சி நிர்வாகத்தால் சாலை மோசமாக உள்ள பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனிடையே மாநகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் ரோடு போட முடிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்து, மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி கூறுகையில், "பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் கம்பெனியில் வாங்கிக் கொள்கின்றனர். இருந்தாலும், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாவது அதிகரிப்பதால், ரோடு போடுவதற்கான தார் கலவையில், 5 சதவீதம் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியிடம் உள்ள 19 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரைத்து அதனை சாலை அமைக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...