கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17ம் தேதி கோவை கருமத்தம்பட்டி அருகே மதுரையை சேர்ந்த கண்ணன் மற்றும் ஜோதி தம்பதியினர் பிறந்து 40 நாட்கள் ஆண் குழந்தையை இடைத் தரகர்களிடம் விற்க முன்வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹசீனா கல்யாணி மற்றும் கோவை மதுக்கரை சேர்ந்த ஜாகிர் உசேன் ஆகியோரை சந்தித்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குழந்தையை பேரம் பேசியுள்ளனர்.
மேலும் குழந்தை வாங்குவதில் எழுந்த பண விவகாரத்தில் ஹசீனாஜாகீர் உசேன் மற்றும் கல்யாணிக்கு ஏற்கனவே பிரச்சினை மூண்டிருந்தது. இந்த நிலையில், இவர்கள் குழந்தையின் பெற்றோர்களுடன் வாகனத்தில் சூலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது தொடர்ச்சியாக எழுந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது. இதை தொடர்ந்து பாப்பம்பட்டி பிரிவு அருகே கல்யாணி சத்தம் போட்டபடி காரிலிருந்து குதித்து ஓடியுள்ளார். இதையடுத்து அருகிலிருந்த மக்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார், சந்தேகத்துக்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஹசீனா, கல்யாணி, ஜாகிர் உசேன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், விசாரணையில் இருந்த குழந்தையின் பெற்றோர் திடீரென நேற்று போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க நேற்று தனிப்படை போலீசார் மதுரைக்கு சென்றனர். பின்னர் போலீசாரின் பிடியில் கைது செய்யப்பட்ட பெற்றோர்கள் இன்று காவல்நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.விசாரணையில் இருந்த குழந்தையின் பெற்றோர் திடீரென போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.