கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 8,403 மனுக்கள் ஏற்பு; 323 மனுக்கள் தள்ளுபடி

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்திருந்த 8,726 மனுக்களில் 8,403 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 323 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்திருந்த 8,726 மனுக்களில் 8,403 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 323 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் துவங்கி, 16ம் தேதியுடன் முடிந்தது.

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும், 228 கிராம ஊராட்சிகளில் 2,034 வார்டு கவுன்சிலர், 155 மாவட்ட கவுன்சிலர், 228 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, 17 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், மொத்தம் 8,726 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 110 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 859, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1,179 பேரும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,578 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரீசிலனை நேற்று நடந்தது.

இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 102, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 783, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1,097, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,421 என மொத்தமாக 8403 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 323 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17ம் தேதி நடைபெற்ற நிலையில், மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...