கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ தொடர்பான ஆலோசனை கூட்டம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இன்று (18.12.2019) ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ தொடர்பான ஆலோசனை கூட்டம்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌/மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி ஆகியோர்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இன்று (18.12.2019) ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ தொடர்பான ஆலோசனை கூட்டம்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌/மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி ஆகியோர்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித்குமார்‌., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ ரமேஷ்குமார்‌, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ பழனிசாமி, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌, மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

இந்த கூட்டத்தில்‌ கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தால்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்கள்‌ 27.12.2019 வெள்ளிக்கிழமை அன்றும்‌, 30.12.2019 திங்கட்கிழமையும்‌ இரண்டு கட்டங்களாக தேர்தல்‌ நடத்திட அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்‌தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல்‌ நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ அறிவுரையின்படி, கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ சிறப்பான முறையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில்‌ தேர்தல்‌ நாளன்று வாக்காளர்கள்‌ எளிதில்‌ சென்று வாக்களிக்கும்‌ விதமாக தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ வகுத்துள்ள விதிகளின்படி வாக்குசாவடி மையங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ உறுதி செய்யவேண்டும்‌. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில்‌ வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள்‌ போன்றவை குறித்து தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌, கூடுதல்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவேண்டும்‌ என கோயம்புத்தூர்‌ மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ தெரிவித்தார்‌.

அதனைத்தொடர்ந்து சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மகளிர்‌ மேல்நிலைப்பள்ளி, சூலூர்‌ ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையமான சூலூர்‌ அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அடிப்படைக்‌ கட்டமைப்புகளான சாய்வுதளவசதி, குடிநீர்‌ மற்றும்‌ மின்சார வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம்‌ கேட்டறிந்தார்‌.

சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியம்‌, பாப்பம்பட்டி நடுநிலைப்பள்ளி, சித்தநாயக்கன்பாளையம்‌ தொடக்கப்பள்ளி, செலக்கரிச்சல்‌ நடுநிலைப்பள்ளி, அப்பநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளி, ஆகிய வாக்குப்பதிவு மையங்களிலும்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன்‌, வாக்குப்பதிவு நடைபெறும்‌ நாட்களுக்கு இருநாட்களுக்கு முன்னதாகவே பள்ளிகளை அந்தந்த தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ வசம்‌ எடுத்துக்கொண்டு முறையாக தேர்தல்‌ ஏற்பாடுகளை செய்ய வேண்டும்‌ என கோவை மாவட்ட தேர்தல்‌ பார்வையாளர்‌ கோவிந்தராஜ்‌ உத்தரவிட்டார்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...