நீலகிரியில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சி பிரமுகர்கள் கூட்டம்

நீலகிரி: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் மோகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் மோகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரியில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்டமாக 27ந் தேதி குன்னூர், கோத்தகிரி ஒன்றியத்திற்கும், இரண்டாம் கட்டமாக 30 ந் தேதி உதகை, கூடலூர் ஒன்றியத்திற்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசால் நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் மோகன் இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.



இந்த கூட்டத்தில் பேசிய தேர்தல் பார்வையாளர் மோகன், நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க தனது தொலைபேசி எண்களை 6383028272 அளித்துள்ளார்.

மேலும், தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாவட்ட முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...