கோவை: கோயம்புத்தூர் கேட்டரி கிளப் நடத்தும் தென்னிந்திய அளவிலான பூனைகள் கண்காட்சி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. அப்போது கேட்டரி கிளப் நிர்வாகிகள் பேசுகையில், இந்த பூனைகள் கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி, மும்பை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 150 பூனைகள் பங்கேற்கின்றன. பெர்சியன், சியமிஸ், மெயின் கவுன், பிரிட்டிஷ் ஷார், பெங்கால் உள்ளிட்ட 20 வகையான பூனைகள் இக்கண்காட்சியில் பங்கேற்பதாக கூறினர்.

உலக கேட்டரி கிளப்பை சேர்ந்த நடுவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறந்த பூனைகளுக்கு பரிசுகளை வழங்குகின்றனர். மேலும், பங்கேற்கும் அனைத்து பூனைகளுக்கும் டிராபிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பார்வை கட்டணமாக ரூ.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.