வால்பாறையில் 33ம் ஆண்டு அய்யப்பன் கோவில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவிலின் 33ம் ஆண்டு மண்டல பூஜை இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவிலின் 33ம் ஆண்டு மண்டல பூஜை இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக காலையில் கணபதி ஹோம பூஜை சிறப்பு அபிக்ஷேம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கொடி உற்சவருடன் கோவிலை சுற்றி வந்து கொடி மரத்தின் முன் வைக்கப்பட்டது. 



கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சாமியே சரணம் அய்யப்பா என்ற பலத்த கோஷத்துடன் ராஜகுரு சுப்புராஜ் குருசாமி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் தலைமை குருக்கள் சிவ ஸ்ரீ கண்ணன், சொற்சக்கரவர்த்தி சிவ ஸ்ரீ இராம விஜயகுமார் தலைமையில் தினமும் கணபதி ஹோமம், அபிக்ஷகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

மேலும், வரும் சனிக்கிழமை அன்னதானமும், மாலை பாலகொம்பு ஊர்வலம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அய்யப்பசாமி அலங்காரத்தேரில் முக்கிய வீதிகளில் பவணி வருகிறார். இந்த விழாவில் ஏராளமான அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...