கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இம்மசோதாவினை திரும்ப வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்க தேசிய குழு உறுப்பினர் ஆனந்த் தலைமையில் நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மக்களை பிளவு படுத்தும் இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.