வரும் 26ம் தேதி சூரிய கிரகணம்; திருப்பூரில் 25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடு

திருப்பூர்: வரும் 26ம் தேதி வரவுள்ள சூரிய கிரகணத்தை திருப்பூரில் 25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: வரும் 26ம் தேதி வரவுள்ள சூரிய கிரகணத்தை திருப்பூரில் 25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



வருகின்ற 26ம் தேதி காலையில் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது சூரிய கிரகணம் இந்த முறை திருப்பூர் கோவை ஈரோடு கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளனர். இந்த சூரிய கிரகணத்தை காண செய்துள்ள ஏற்பாடு குறித்து திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது, அவர்கள் பேசுகையில், சுமார் 350 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதிகளில் தெரிய உள்ள சூரிய கிரகணத்தை காணும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பிரத்யேக கண்ணாடிகள் தயார் செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது எனவும் அதே போல், வெறும் கண்ணால் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்த அவர்கள், காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டாலும் கூட சரியாக 9 மணியளவில் 3 நிமிடங்கள் வரை முழு சூரிய கிரகணமாக காண முடியும் என்று தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...