வரும் டிச., 23ம் தேதி மாபெரும் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு பேரணி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பாக சென்னையில் வரும் 23ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கோவை: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பாக சென்னையில் வரும் 23ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வருகிற 23ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் மிகப்பெரிய பேரணியை நடத்துவது என்று முடிவுசெய்துள்ளோம்.



மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை பெறுவோர் பட்டியலில் உள்ள அண்டை நாடுகளில் பட்டியலில் இலங்கை இடம்பெறாமல் போனது ஏன்? அகதிகளாக வரும் வேறு மதத்தினரில் இஸ்லாமியரை தவிர்த்திருப்பது ஏன்? இந்த இரண்டு கோரிக்கைகளை வைத்துதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர், பாமக மாநிலங்களை உறுப்பினர் ஒருவர் என 12 பேர் இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்ததால்தான் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் தமிழின துரோகிகள் என்றுதான் அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்றார். மேலும், அனைத்து கட்சி கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...