நீலகிரியில் இரண்டு கார்களை திருடிய நபரை ஏற்காட்டில் கைது செய்த போலீசார்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் 2 பொலிரோ வாகனங்களை திருடிச் சென்ற நபரை சேலம் ஏற்காட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் 2 பொலிரோ வாகனங்களை திருடிச் சென்ற நபரை சேலம் ஏற்காட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரைபில்ரேஞ் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால். 



இவர் தேனாடு பகுதியில் நிறுத்திவிட்டு சென்ற பொலிரோ ஜீப் மற்றும் வேன் காணாமல் போனதையடுத்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மாேகன் உத்தரவின் பேரில் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையில், துணை ஆய்வாளர்கள் வேல்முருகன், சுரேந்தர் மற்றும் ஜார்ஜ் கொண்ட குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், சேலம் ஏற்காடு பகுதியில் உள்ள ஒரு சோலையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து ஏற்காடு விரைந்து சென்ற தனிப்படையினர், இரண்டு வாகனங்களை மீட்டனர்.

பின்னர், சேலம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் விஜி (23) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் இரண்டு வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...