தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை 5வது முறையாக வென்ற கோவை சி.ஆர்.ஐ. நிறுவனம்

கோவை: மின் ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்தும் பம்பு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சி.ஆர்.ஐ. நிறுவனம், இந்திய அரசின் பெருமைமிகு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை ஐந்தாவது முறையாகவும், தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் வென்றுள்ளது.

கோவை: மின் ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்தும் பம்பு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சி.ஆர்.ஐ. நிறுவனம், இந்திய அரசின் பெருமைமிகு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை ஐந்தாவது முறையாகவும், தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் வென்றுள்ளது.

பலவகையான 5 ஸ்டார்-ரேட்டிங் கொண்ட B.E.E. பம்புகளை வழங்கும் சி.ஆர்.ஐ. நிறுவனம் மீண்டும் ஒருமுறை மின் ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்தும் பம்புகள் உற்பத்தியில் முதன்மை வகித்து, பம்பு பிரிவிற்கான 2019-ம் ஆண்டுக்கான தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதினை வென்றது.

அமைச்சர் திரு.ஆர்.கே. சிங், (I/C) தேசிய மின்சாரம் மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரிடமிருந்து இந்த விருதைப் பெறுகையில் சி.ஆர்.ஐ. குழுமத்தின், இணை நிர்வாக இயக்குனர், ஜி.செல்வராஜ் அவர்கள் கூறியதாவது, “இந்திய அரசிடமிருந்து இந்த பெருமைமிகு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதினைப் பெறுவது பெருமை அளிக்கிறது. சி.ஆர்.ஐ.யின் தாரக மதிப்புகளும், உலகத்தினை மேம்பட்டதாக ஆக்கவேண்டுமென்ற அர்ப்பணிப்பும் தான் இந்த விருதினை மூன்று முறை தொடர்ந்து பெறக் காரணமாகும். மொத்தமாக ஐந்து முறை இந்த விருதினை வென்றுள்ளோம். பம்புகளின் தேவை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் மின் ஆற்றலை சேமிப்பது முக்கிய குறிக்கோளாக உள்ளது.

எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான, ஃப்ளுட்யின் மேம்பட்ட தொழில்நுட்ப மையம் (இந்திய அரசின் அங்கிகாரம் பெற்றது) மற்றும் சி.ஆர்.ஐ குழுமத்தின் அனைத்து துறையினரின் அயராத முயற்சியின் காரணமாகவே எங்கள் தயாரிப்புகளில் அதிக ஹைட்ராலிக் மற்றும் ஒட்டுமொத்த பம்பிங் செயல்திறனை எங்களால் அடைய முடிந்தது. ஆற்றலை சேமிக்க நாங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை அங்கீகரித்த இந்திய அரசிற்கு நாங்கள் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எங்கள் இலக்கை அடைய உத்வேகம் தந்தமைக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.

பல்வேறு திரவ பயன்பாட்டு தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பம்புகளை வழங்கிவரும் உலக நிறுவனங்கள் சிலவற்றுள் சி.ஆர்.ஐ நிறுவனமும் ஒன்று. குறிப்பாக தொழிற்சாலை மற்றும் நீர் அண்டு கழிவுநீர் பம்பிங் தேவைகளுக்கான சிறப்பு பம்புகளை 1850 கேவி (2500 ஹெச்பி) வரை திறனுடன் வழங்கி வருகிறது.

மொபைல் போன்களின் மூலமாகவோ அல்லது தானியங்கி புரோகிராம்கள் மூலமாகவோ இயங்கக்கூடிய இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனப்படும் பலதிறன் வசதி கொண்ட ஸ்மார்ட் பம்புகளை உற்பத்தி செய்வதில் சி.ஆர்.ஐ. குறிப்பிடத்தக்க அளவில் தமது உழைப்பினை முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் நாம் அதனை இயக்கவேண்டிய அவசியம் குறைந்து, மின் ஆற்றல், நீர், நேரம் மற்றும் பணம் ஆகியவை உட்பட சுற்றுப்புற வளங்கள் பாதுகாக்கப் படுகின்றன. இதுவரை சி.ஆர்.ஐ., 60,000க்கும் மேற்பட்ட இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் பம்புகளை நிறுவியுள்ளது. AgDSM போன்ற, பல்வேறு ஆற்றல் சேமிப்பு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் நம்பகமான பங்காளராக சி.ஆர்.ஐ. நிறுவனம் திகழ்கிறது. இந்த சாதனையை புரிந்ததில் சி.ஆர்.ஐ. பெருமை கொள்கிறது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் தேவை அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில், சி.ஆர்.ஐ. முழுவதும் தம்மிடமே தயாரான அதிநவீன தொழில்நுட்பமான இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் வசதியுடன் கூடிய டி.சி மற்றும் எ.சி. மோட்டார்களை கொண்டு சூரிய ஆற்றலின் மூலம் இயங்கும் 30,000-க்கும் மேற்பட்ட சிறப்பான பம்பிங் சிஸ்டம்களை பொருத்தி, மின்சாரம் சேமிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. சூரிய சக்தி பிரிவைப் பொருத்தவரை, தமது நீடிப்புத்தன்மையின் காரணமாக சி.ஆர்.ஐ ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பம்புசெட்கள் நல்ல அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.

300-க்கும் மேற்பட்ட ஸ்டார்-தர பம்புகளுடன், சி.ஆர்.ஐ. இதுவரை 1.4 மில்லியனுக்கும் மேலான பம்புகளை நாடு முழுவதும் பொருத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டிற்காக மொத்தமாக சுமார் 13,000 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பு மட்டுமின்றி, சி.ஆர்.ஐ. பம்புகள் 10 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு கார்பன் ஃபூட்பிரின்ட் (பயன்பாட்டை) குறைத்துள்ளது. தமது அறிவார்ந்த லட்சியத்துடன், எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கான தமது பங்களிப்பை அதிகரிக்க சி.ஆர்.ஐ. உறுதிகொண்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...