அன்னூர் அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

கோவை: கோவை அன்னூர் அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கோவை: கோவை அன்னூர் அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி பொகளூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட சொக்கட்டாம்பள்ளி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர். குக்கிராமமாக இருக்கும் இந்த கிராமத்திற்கென இதுவரை தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு இதுவரை தங்களுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த கிராம மக்களும் வரும் உள்ளாட்சி தேர்தலை முற்றிலும் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.



பொகளூர் ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட வார்டு எண் 4 மற்றும் 5 பகுதிகளில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைக்கும் அப்பகுதி கிராம மக்கள், தங்கள் பகுதியில் இருந்த சாலையை பீய்தெரிந்து விட்டு புதிய சாலையை அமைத்து தருவதாக கூறி, பூமி பூஜை போட்டு சென்றவர்கள் அதன் பின் எந்த பணியும் மேற்கொள்ளாததால் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் முழுவதும் கற்களாக இருப்பதால் வாகனங்கள் ஓட்டவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் சாலை வசதியின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அவசர தேவைக்கு மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்தனர்.



மேலும், இந்த ஊரில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில், 2016ம் ஆண்டு இப்பள்ளி கட்டிடம் அதன் உறுதி தன்மையை இழந்து கட்டிடங்கள் இடியத்துவங்கின. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி பள்ளி மாணவர்கள் அருகில் இருந்த சிறிய நூலக கட்டிடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டனர். தற்காலிகமாக இடம் மாற்ற செய்யப்பட்ட இந்த பள்ளி குழந்தைகளுக்கு இதுவரை மாற்று கட்டிடம் வழங்காமல் இருப்பதால் ஒரே அறையில் ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், மழலையர் பள்ளி கட்டிடத்திலும் ஆங்காங்கே விரிசல் விட்டு எப்போது மழைக்கு இடிந்து சுவர்கள் விழும் என்ற சூழல் நிலவுவதாக அப்பகுதி குழந்தைகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், குடிநீர் சாக்கடை,தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அன்றாட வாழ்க்கை நடத்தி போராட்டம் கண்டுவரும் இந்த கிராம மக்கள் தங்களுக்கான தீர்வை ஏற்படுத்தவும் அரசின் கவனத்தை ஈர்க்கவும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...