நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அதிகப்படியான மழை மற்றும் மூடுபனி காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் முதல் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அடர்ந்த மேக மூட்டமும், சுற்று வட்டாரப் பகுதிகளில் மழையுடன் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா வந்தவர்களில் பலரும் காலை சில மணி நேரம் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து காணப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது.