நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து வணிகர் சங்கங்கள் சார்பாக ஏடிசி திடலில் போராட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து தெரிவித்து நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும், ஆன்லைன் வர்த்தகத்தால் உள்ளூர் வர்த்தகர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் கடை வாடகை, வரி உள்ளிட்டவற்றை கட்டவே சிரமப்படும் சூழலில், ஆன்லைன் வர்த்தகத்தால் தங்களது வியாபாரம் மிகவும் பாதிக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஆர்.பரமேஸ்வரன், செயலாளர் எம்.ஏ.ரகீம், உதகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.