கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் துவங்கியுள்ள 12வது யானைகள் புத்துணர்வு முகாமுக்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இரண்டு யானைகள் வந்தடைந்தது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான 12வது சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 15ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவில் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன. கடந்த 2003ம் ஆண்டு முதல் தமிழக கோவில் மற்றும் திரு மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான அவற்றின் மனச்சோர்வினை நீக்கி புத்துணர்வு அளிக்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வழக்கமாக முகாம் நடைபெறும் போது அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் இருந்தும் யானைகள் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டிக்கு அனுப்பிவைக்கப்படும். எனவே, இதனை கணக்கில் கொண்டே 28 யானைகள் பங்கேற்கும் என அறிவித்திருந்த நிலையில், யானைகளை சாலை மார்க்கமாக கொண்டுவர உரிய அனுமதி கிடைக்காத காரணத்தால் அந்த யானைகள் முகாமில் பங்கேற்க வில்லை.

இந்த நிலையில் முகாம் துவங்கிய இரண்டு நாட்கள் கழித்து, தற்போது புதுச்சேரியில் இருந்து இரு யானைகள் தேக்கம்பட்டி முகாமில் கலந்துகொள்ள புதுவரவாக வந்துள்ளன.

திருநள்ளாறு ஶ்ரீ தர்பரண்யேஸ்வரர் தேவஸ்தானம் யானை பிருக்ருதி மற்றும் புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் யானை லட்சுமி ஆகிய இரு யானைகள் இன்று காலை முகாம் நடைபெறும் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகைக்கு வந்து சேர்ந்தது. யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் பழங்கள் கொடுத்து முகாமுக்குள் வரவேற்றார். முகாமில் உள்ள யானைகளை பார்த்த இரு யானைகளும் மிகுந்த உற்சாகம் அடைந்தன. 48 நாட்கள் முகாமில் யானைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.