கேந்திரிய வித்யாலயா மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்; ஆசிரியர்கள் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி பள்ளி மாணவர்களுடன் பி.ஆர்.நடராஜன் ஆட்சியரிடம் மனு

கோவை: சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை: சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தின் அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவரை ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஆசிரியர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கூறி கோவை அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, பள்ளி வகுப்பறையில் சக மாணவர்களை வெளியேற்றி விட்டு தன்னை முதல்வரும் ஆசிரியைகள் சிலரும் சேர்த்து தாக்கியதாகவும், ஆடைளை களைந்து நிர்வாணப்படுத்தி பிறப்புறுப்பை கசக்கி துன்புறுத்தியதுடன், அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சூலூர் காவல் துறையில் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் கேந்திரிய பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதற்காக 11ம் வகுப்பு மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அவரும் அவரது தம்பி 9ம் வகுப்பு மாணவருடன் சேர்ந்து முதல்வரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், மாணவர்களை தூண்டி விட்டதாக அவர்களின் பெற்றோர்கள் ஹரேராம் சிங், சீமா குமாரி மீது பள்ளியின் பொறுப்பு முதல்வர் நாகேந்திரன் புகார் அளித்தார். இதன் பேரில் சூலூர் விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் ஆபிசராக பணியாற்றி வரும் ஹரேராம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதும் 3 பிரிவுகளில் சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.



இந்நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் மற்றும் கேந்திரிய வித்யலயா பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது பீகார் மாணவர்கள் பொய் புகார் அளித்து பள்ளியின் நன்மதிப்பை கெடுத்துள்ளதாகவும், சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தாமல் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என புகார் தெரிவித்தனர். மேலும், இரண்டு பீகார் மாணவர்களையும் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும், பள்ளி தொடர்ந்து இயங்கவும், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.

இதேபோல, பள்ளி சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை என சூலூர் விமானப் படைத்தள அதிகாரி ஹரேராம்சிங் மற்றும் சீமா குமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகாரளிக்க வந்தனர். அதில், பள்ளி நிர்வாகம் முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தங்களது மகன்களை பள்ளியில் இருந்து வெளியேற்றும் நோக்கில் நாடகமாடுவதாக தெரிவித்தனர். தங்களது புகாரின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பள்ளி நிர்வாகம் தங்களது மகன்கள் மீது பொய் புகாரளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரு தரப்பினரும் மாறி மாறி புகாரளிக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...