கோவை: கோவை அடுத்த ஒண்டிபுதூர் சிவலிங்கபுரத்தில் மேம்பாலத்திற்காக ஆணை பிறப்பித்துவிட்டு தற்போது தரைப்பாலம் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஒண்டிபுதூர் அடுத்த சிவலிங்க புரத்தில் ரயில்வே கடவு உள்ளது. இதன் வழியாக கோவை ரயில்நிலையம் மற்றும் கேரளா மாநிலம் நோக்கி செல்லும் ஏராளமான ரயில்கள் செல்கிறது. இதன் காரணமாக இந்த ரயில்வே கிராசிங்கை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து இங்கு மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 2011 ஆண்டு இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான ஆணை பிறப்பித்தார். ஆனால் கடந்த 8 வருடங்களாக இதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், இங்கு மேம்பாலத்திற்கு பதிலாக தரைப்பாலம் அமைப்பது என அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படும் எனவும் அவசர தேவைக்குக்கூட ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உண்டாகும் நிலை உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்ட மேம்பாலத்தை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை இப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று வடகோவையில் உள்ள நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனுவை அளித்துவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கபுரம் மக்கள் முற்றுகையிட்டதால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்தவர் கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பொதுமக்களின் சார்பில் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் பொதுமக்களிடையே பேசுகையில், நீண்டகால திட்டத்திற்கு மேம்பாலம் அமைப்பதே சிறந்தவழி, தற்போது ஊரக தேர்தல் காலமாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கான பணியில் உள்ளதால் ஜனவரி முதல் வாரத்தில் அதிகாரிகளை சந்தித்து மக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்றார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.