குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகக் கூறி கோவையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகக் கூறி கோவையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்ட திருத்தத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்திருப்பதாக கூறி திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலணி அருகேயுள்ள டாடாபாத் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகவும், இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.



இதேபோல, திமுக சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மு.பெ சாமிநாதன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...