கோவை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் தொடர்ச்சியாக சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் சாய்பாபா காலனி பகுதியில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடும் முயற்சியின் போது போலீசார் துரத்திப் பிடித்து மூன்று பேரை கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல்காரர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டும் இவர்களின் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

மேலும் காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்எஸ்புரம் காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மரத்தை வெட்டி கடத்திய கடத்தல்காரர்கள் கடைசியாக சிங்காநல்லூர் காவல் எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரக்கட்டைகளை கடத்தி அந்தப் பகுதிகளில் உலாவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. மேலும் இவர்கள் கடந்த மாதம் 30ம் தேதியிலிருந்து சுமார் எட்டு நாட்கள் சிங்காநல்லூர் பகுதியில் தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் சந்தனமர கட்டைகளை வெட்டி கடத்தியதாக பொதுமக்கள் தரப்பிலும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சிங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களும் போலீசாரும் இணைந்து கடத்தல்காரர்களை பிடிக்க இரவு நேரங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் வேறு பகுதியை நோக்கி நகர ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் சாய்பாபா காலனி காவல் எல்லையில் சந்தன மரத்தை வெட்டி கடத்தும் கும்பல் உலாவி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது, சாய்பாபா காலனி பகுதியில் கடத்தல் கும்பலை நோட்டமிட்ட போலீசார் இன்று அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணி வரை அவர்களை பிடிக்க தீவிரம் காட்டினர். இதையடுத்து போலீசாரின் பிடியில் சிக்காமல் ஓடியபடி சென்ற திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(21), விஷ்ணு(20) மற்றும் அன்பு (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த மரம் அறுக்கும் ஆயுதங்களான கோடாரி, ரம்பம் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல தப்பியோடிய நான்கு பேருக்கு போலீஸ் வலை வீசி உள்ளனர்.
ஏற்கனவே சிங்காநல்லூர் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்த நிலையில், தற்போது சாய்பாபா காலனி பகுதியில் கைது செய்யப்பட்டவர்களும் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் என்பதால் அனைவரும் ஒரே குழுவினரே என்பது தெரியவந்துள்ளது.