நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 1813 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் 493 உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடி தேர்தல் நடக்கிறது. குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 27ம் தேதியும், உதகை, கூடலூர் ஒன்றியங்களுக்கு 30ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 493 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 4 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 4 ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், 35 கிராம ஊராட்சி துணை தலைவர், 1 ஊராட்சி தலைவர், 1 துணை தலைவர் ஆகியோர் மறைமுகமாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக உள்ளிட்ட கட்சியினை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் இந்த தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டினர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் 1813 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.