கோவை, டிச. 17: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கி 16ம் தேதி முடிவடைந்தது. இதில் மொத்தம் 8726 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கோவை, டிச. 17: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கி 16ம் தேதி முடிவடைந்தது. இதில் மொத்தம் 8726 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் துவங்கி, 16ம் தேதியுடன் முடிந்தது.
கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும், 228 கிராம ஊராட்சிகளில் 2,034 வார்டு கவுன்சிலர், 155 மாவட்ட கவுன்சிலர், 228 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, 17 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.
இதனிடையே இறுதி நாளான நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 78 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 597 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 536 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3209 பேரும் என மொத்தம் 4420 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே மொத்தம் 8726 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 110 பேரும் , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 859, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1179, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பேர் 6578 தாக்கல் செய்துள்ளனர்.