ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல்‌ நடைபெறும்‌ மையங்களில்‌ உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ நேரில்‌ ஆய்வு

கோவை: கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல்‌ நடைபெறும்‌ மையங்களில்‌ கோவை மாவட்ட உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல்‌ நடைபெறும்‌ மையங்களில்‌ கோவை மாவட்ட உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ நடைபெறும்‌ மாவட்டங்களுக்கு தேர்தல்‌ பார்வையாளர்களாக இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை நியமனம்‌ செய்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கு தேர்தல்‌ பார்வையாளராக நியமனம்‌ செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின்‌ பதிவாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று (டிச., 16) பெரியநாயக்கன்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியம்‌, காரமடை ஊராட்சி ஒன்றியம்‌, மற்றும்‌ எஸ்‌.எஸ்‌.குளம்‌ ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில்‌ உள்ள வாக்குப்பதிவு மையம்‌ மற்றும்‌ வாக்கு எண்ணிக்கை மையங்களில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறையின்‌ செயற்பொறியாளர்‌ பசுபதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌. முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ தொடர்பாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்களுடன்‌ தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, ஆலோசனை மேற்கொண்டார்‌.

பெரியநாயக்கன்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை மையமான அசோகபுரம்‌ அரசு மேல்நிலையில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை‌ கட்டமைப்புகளான சாய்வுதளவசதி, குடிநீர்‌ மற்றும்‌ மின்சார வசதி உள்ளிட்டவை குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம்‌ கேட்டறிந்தார்‌. தொடர்ந்து அசோகபுரம்‌ ஊராட்சி வாக்குப்பதிவு மையமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்‌ மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து அலுவலர்களிடம்‌ கேட்டறிந்தார்‌.

பின்னர் மாவட்டத்தின்‌ தொலைதூர கிராமங்களில்‌ உள்ள வாக்குப்பதிவு மையங்களான நஞ்சுண்டாபுரம்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சின்னதடாகம்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆனைகட்டி உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய பகுதியில்‌ மக்கள்‌ வாக்களிக்கும்‌ வாக்கு பதிவு மையங்களில்‌ ஆய்வு மேற்கொண்ட தேர்தல்‌ பார்வையாளர்‌ அவர்கள்‌, மலையோர கிராமங்களிலிருந்து வாக்களிக்க வருகை தரும்‌ வாக்காளர்களுக்கு போதிய வாகன வசதிகளும்‌, தெருவிளக்கு வசதிகள்‌ முறையாக இருப்பதை அலுவலர்‌ உறுதி செய்திட அறிவுறுத்தினார்‌. மாற்றுத்திறனாளிகள்‌ வாக்களிக்க வருகை தரும்போது பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளங்களில்‌ எவ்வித பழுதுகளும்‌ இருக்கக்கூடாது. மேலும்‌, கட்டுமானப்பணிகள்‌ நடைபெறும்‌ பள்ளிகளில்‌ கட்டுமான பணிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும்‌ கற்கள்‌ உள்ளிட்ட எவ்வித பொருட்களும்‌ முறையாக அப்புறப்படுத்திட வேண்டும்‌ எனவும்‌ தேர்தல்‌ பார்வையாளர்‌ அவர்கள்‌ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களான தோலம்பாளையம்‌ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிக்காரம்பாளையம்‌ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய மையங்களிலும்‌, சர்க்கார்சாமகுளம்‌ ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களான வெள்ளமடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தொட்டிபாளையம்‌ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்களிலும்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன்‌, பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ அனைவரும்‌, வாக்குப்பதிவு நடைபெறும்‌ நாட்களுக்கு இருநாட்களுக்கு முன்னதாகவே பள்ளிகளை அந்தந்த தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ வசம்‌ ஒப்படைக்கவேண்டும்‌ என கோயம்புத்தூர்‌ மாவட்ட தேர்தல்‌ பார்வையாளர்‌ கோவிந்தராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவிட்டார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...