கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு அளித்தால் அவர்களாலும் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று மாற்றுத் திறனாளி பிரான்சிஸ் என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உதவிட கோரினார்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி வி.வி.பிரான்சிஸ்(62). இவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இவரது கை,கால் செயல்பாடுகள் இழந்தன. இதனை தொடர்ந்து, 16 வயதில் விளையாட்டின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக விளையாட துவங்கிய இவர், தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

ஐந்து நாடுகள் பங்கேற்ற மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் போட்டியில் சிறந்த வீரருக்கான விருது பெற்றுள்ள அவர், தனது வாழ்வாதாரத்திற்கு ஏதாவது ஒரு வகையில் வழிவகை ஏற்படுத்தி தரகோரி தான் பெற்ற பதக்கங்களுடன் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனக்கு உதவிட வலியுறுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில் நீச்சல், வீல் சேர் போட்டி, ஈட்டி எறிதல், உட்கார்ந்த நிலையில் விளையாடும் கிரிகெட் போட்டி, கூடைப்பந்து என பல்வேறு போட்டிகளில் தான் பங்கேற்று உள்ளதாகவும் கூறினார். மேலும் தன்னால் கீ போர்ட், வயலின் வாசித்தல், மிமிக்கிரி, மாயாஜாலம் என பல்வேறு திறமைகள் தன்னிடம் உள்ளதாக கூறிய அவர், விளையாட்டின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக இதுவரை தனது வாழ்வாதாரம் குறித்து கவலைப்படவில்லை எனவும் தனக்கு ஏதாவது ஒரு வகையில் அரசு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் கம்யூட்டர் பணி செய்து வருவதாகவும் மாற்றுத் திறனாளிகளிடையே தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அணிகளை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். வயது முதிர்வு காரணமாக அரசு பணிக்கான வாய்ப்பு இல்லை என்றாலும் குறைந்த பட்சம் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் பட்சத்தில் மாற்று திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வித்திட முடியும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.