கோவை: கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற பாரத் சேனா அமைப்பை சேர்ந்த 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் நடூரில் சுற்றுசுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை கோரி இன்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை வந்துள்ளார்.
இந்நிலையில், கோவை வந்துள்ள திருமாவளவனை கண்டித்தும், அவர் உடனடியாக கோவையில் இருந்து வெளியேற வலியுறுத்தியும் பாரத் சேனா அமைப்பினர் இன்று பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் திருமாவளவனுக்கு கருப்புகொடி காட்ட முயன்றனர். இதையடுத்து, பாரத் சேனா அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது, இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவன் கோவையை விட்டு வெளியேற வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பாரத் சேனா அமைப்பினர் தெரிவித்தனர்.