கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது இறைவனையே சேரும்..! கண்டசாலாவின் 97வது பிறந்த நாள் விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு

கோவை: உலக தெலுங்கு கூட்டமைப்பு மற்றும் கலா பிரதர்ஷினி கலை மற்றும் கலாச்சார மையம் இணைந்து கண்டசாலாவின் 97வது பிறந்த நாளை கோவை கிக்கானி பள்ளியின் அரங்கில் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் அவரது கணவர் செளந்தரராஜன் கலந்து கொண்டு விழாவினை வழிநடத்தினர்.


கோவை: உலக தெலுங்கு கூட்டமைப்பு மற்றும் கலா பிரதர்ஷினி கலை மற்றும் கலாச்சார மையம் இணைந்து கண்டசாலாவின் 97வது பிறந்த நாளை கோவை கிக்கானி பள்ளியின் அரங்கில் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் அவரது கணவர் செளந்தரராஜன் கலந்து கொண்டு விழாவினை வழிநடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் உலக தெலுங்கு கூட்டமைப்பின் தலைவர் வி.எல்.இந்திரா தத் தலைமை வகித்து வரவேற்புரை நல்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஏவி குழும நிறுவனங்களின் தலைவர் ஏவி வரதராஜன், உலக தெலுங்கு கூட்டமைப்பு கோவை கிளையின் தலைவர் ரமா விஜயகுமார், துணைத் தலைவர் கே.கிருஷ்ண கோபால், கலா பிரதர்ஷினியின் நிர்வாக அறங்காவலர் மற்றும் கலை இயக்குனர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த விழாவில் கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஷ்கார் விருது ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார். மேலும் இவ்விருது பரதக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம் மற்றும் சிதார் கலைஞர் பண்டிட் மிட்டா ஜனார்தனுக்கும் வழங்கி கெளரவ படுத்தினர். இந்தியாவின் அனைத்து கலைகளையும் ஒன்றிணைக்கும் வகையில் பாரத் கலா சங்கமம் அமைப்பு உருவாக்கினர். 



அதன் லோகோவினை தமிழிசை செளந்தரராஜன் மேடையில் வெளியிட்டார்.



பின்னர் விருதினை வழங்கி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாராட்டிப் பேசுகையில், கலை உலகுக்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது எனவும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர், எம்.கிருஷ்ணன் அவரது இனிப்பகத்தில் தயாரிக்கும் இனிப்பினைப் போல மிகவும் இனிமையானவர் என கூறினார்.

கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது இறைவனையே சேரும் எனவும், அதே போல் எளிமையும் இறைவனை மட்டுமே சென்றடையும் என்றும், இன்று விருது பெற்ற எம்.கிருஷ்ணன், கே.கல்யாணசுந்தரம், பண்டிட் மிட்டா ஜனார்தனனின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான பங்களிப்பு அவர்களை மட்டுமின்றி அவைகள் அனைத்தும் இறைவனையே சேரும் என்று பேசினார்.

பின்னர், விருதினை பெற்ற கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் பேசுகையில், இறைவனுக்காக யாகங்கள் நடத்தும் போது வேள்வித்தீயில் பல பொருட்களை இழக்க நேரிடும், அப்படி இழக்கப்படுவதற்காகவே படைக்கப்படும் போது மட்டுமே, அழகான மந்திரங்கள் ஓதப்படும் அந்த மந்திரங்கள் இறைவனை நாடி சென்று விடும் என்றும் எனக்கு வழங்கப்பட்ட விருது எங்கள் தொழிலாளர்களின் வியர்வைக்கு கிடைத்தது. நான் எனது இல்லத்திற்கு எடுத்து சென்றால் நிச்சயம் அது மிகையாகாது, இந்த விருதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வை உள்ளது. அதனால் நான் பெருமைப்படுகிறேன் அவர்களையும் பெருமை படுத்துகிறேன் என கூறினார். சுவாமி தயானந்த சரஸ்வதி கூறுவார் எந்த விருதும், பாராட்டுகளும் இறைவனிடம் இருந்து கிடைத்த பிரசாதமாக கொள்ள வேண்டும் என்று. இந்த விருந்து மக்களாகிய இறைவனிடம் இருந்து எனக்கு கிடைத்த பிரசாதமாக நான் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பரதக் கலைஞர்களான பார்வதி ரவி கண்டசாலா, கவிதா ராமு, லாவண்யா சங்கர் ஆகியோர் கண்டசாலாவின் பாடல்களுக்கு நடனமாடும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...