கேந்திரிய வித்யாலயா மாணவரை ஆசிரியர்கள் தாக்கிய விவகாரம்; தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

கோவை: சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் முதல்வர் உட்பட ஆசிரியைகள் மீது சூலூர் போலீசார் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் முதல்வர் உட்பட ஆசிரியைகள் மீது சூலூர் போலீசார் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கேம் ராம்சிங் கோவை திருச்சி சாலையில் உள்ள சூலூர் விமான தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன்கள் அதே பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பும், மற்றொருவர் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேம் ராம் சிங்கின் மகன்களை குறும்பு செய்ததாகவும், செல்போன் பயன்படுத்தியதாகவும் கூறி அப்பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக அடித்து உடல் மற்றும் மன ரீதியாக சித்திரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அம்மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சூலூர் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து மர்ம உறுப்புகளில் தாக்கி மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக புகார் அளித்தனர். இதையடுத்து சூலூர் போலீசார் பள்ளியின் முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி மற்றும் அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம் 7,8-இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இதனிடையே பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் சென்றனர்.



பீகார் மாணவர்கள் வகுப்புகளில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மீது பொய் புகாரளித்து இருப்பதாகவும் கூறிய மாணவர்கள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே போராட்டத்தின் அழுத்தத்தையடுத்து புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். ஆசிரியர்களுக்கு ஆதரவாக, சக மாணவருக்கு எதிராக பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...