கோவை: நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால், இந்தியாவில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு மணி நேரத்திற்கு 55 சாலை விபத்துகளும், அதில் 17 உயிர் பலிகளும் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டில் 4,80,652 சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும் அதில் 2,68,341 விபத்துக்கள் அதிவேகமாக பயணம் சென்ற காரணத்தாலும், 29,647 விபத்துக்கள் வாகனங்களை முந்திச் செல்லும்போது ஏற்பட்டுள்ளதாகவும்,17,654 விபத்துக்கள் தவறான பாதையில் வாகனங்களை செலுத்தியதாலும், 8,513 விபத்துக்கள் சாலையில் பாதை மாறி ஓட்டியதாலும் விபத்துக்கள் நடந்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு விதிமீறல்களை தனியார் பேருந்துகள் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருகிறது.
கோவையில் தொடரும் தனியார் பேருந்துகளின் அட்டகாசம்;-
கோவை மாவட்டத்திலுள்ள திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த தனியார் பேருந்துகளின் அட்டகாசங்களை தடுக்க போக்குவரத்து காவல்துறையினரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதே சமயம் இவர்களின் அட்டகாசத்தை பொதுமக்கள் யாராவது தட்டி கேட்டால் அவர்கள் தங்கள் முதலாளியின் அரசியல் பலத்தை பயன்படுத்துகின்றனர்.
ஆட்சியரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் தனியார் பேருந்துகளும், கண்டுகொள்ளாத துறை அதிகாரிகளும்;-
தொடரும் விதி மீறலை கட்டுப்படுத்த கடந்த ஜீலை 31ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல, பொதுமக்களின் பாதுகாப்பை போக்குவரத்து காவல் துறையும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டார். அத்துடன் விதிமுறைகளுக்கு மாறாக இயக்கப்படும் பேருந்துகள் மீது 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தனது உத்தரவை செய்தி குறிப்பாக வெளியிட்டிருந்தார்.
ஆனால், மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே தனியார் பேருந்துகள் வழக்கம்போல தங்களது விதிமீறல்களை தொடர்ந்து கொண்டிருந்தன. அதேபோல போக்குவரத்து துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் ஆட்சியரின் உத்தரவை செயல்படுத்தவும் இல்லை என்பதை சாலையில் நடைபெறும் தனியார் பேருந்துகளின் சாகசங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தும் தனியார் பேருந்துகள் :- கொதிக்கும் மேட்டுப்பாளையம் பொதுமக்கள்
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மேம்பாலம் அருகே நேற்று TN 04 E 8298 என்ற எண் கொண்ட ஆம்னி காரில் நான்கு பேர் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த ராஜம் என்ற பெயர் கொண்ட தனியார் பேருந்து அதிவேகமாக பாதை மாறி வந்து கார் மீது மோதியது. இதில் காரமடை சேரன் நகரைச் சேர்ந்த ராஜேஷ் 39, சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத்தொடர்ந்து காரில் இடதுபுறம் அமர்ந்திருந்த சசிக்குமார் இடது கால் முறிந்து கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹேமலதா மற்றும் அவரின் மகள் ரேஷ்மா ஆகியோர் சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணகுமார் (28), காரமடை போலீசாரால் 279, 337, 304(A) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த தனியார் பேருந்தின் விதி மீறலால் நடந்த உயிர் பலிக்கு மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தெரிந்தே நடத்திய உயிர் பலியை விபத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது இது தொடரும் கொலை என குற்றமும் சாட்டியுள்ளனர்.
இது குறித்து நம்ம மேட்டுப்பாளையம் குழுவை சேர்ந்த சமூக ஆர்வலர் பாஷா கூறும் போது;-
தனியார் பேருந்துகள் பணத்திற்காக விதிமீறி வாகனத்தை இயக்கி பல உயிர்களை பலியாக்கி வருகின்றனர். மேலும் இவர்களின் விதிமீறல்களை பொதுமக்களில் யாராவது தட்டிக்கேட்டால் அவர்களுக்கு மிரட்டலும், பல்வேறு கட்ட எதிர்ப்பு கிளம்புகிறது.
அதேபோல, இவர்கள் தெரிந்தே அதிவேகமாக வாகனத்தை இயக்கி உயிர்பலி ஏற்படுத்துவதை விபத்தாக பார்க்க முடியவில்லை. கொலையாக தான் மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் பார்க்கிறோம். ஏனென்றால் இவர்கள் தெரிந்தே மீண்டும் மீண்டும் உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகின்றனர். இனி அடுத்த முறை இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் பொழுது கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.
தனியார் பேருந்துகளின் விதிமீறல்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் போக்குவரத்து துறையும், காவல்துறையும் மௌனம் காப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பவதுடன், தொடரும் உயிர் பலிகளை கட்டுப்படுத்த உரிய சட்டமியற்றி மாற்றுவழி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.