கோவை: தேர்தல் விதிமுறையையொட்டி மக்கள் குறைதீர்ப்பு நாள் மனுக்கள் பெட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திங்களன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மனுக்கள் பெறுவது கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதனை அறியாமல் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக்கள் அளிக்க தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் மக்கள் குறை தீர்ப்பு நாள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. கோவையிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

மக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை இங்கு வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் மனுக்களை போட்டு செல்கின்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்ற பின் இந்த மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அளிக்கும் பட்சத்தில் தேர்தல் விதிமுறையையொட்டி குறை தீர்ப்பு மனுக்கள் மீதான நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.