கோவை: வால்பாறை நகரில் வாழை தோட்டத்தை அழித்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது வால்பாறை நகராட்சியின் சுற்றுலா மாளிகையின் பின்பகுதியில் தனி நபர்கள் வாழை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு இப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை அங்குள்ள வாழை மரங்களை ஒடித்து சாப்பிட்டுச் சேதப்படுத்தின.

இதையடுத்து, காட்டு யானை அருகில் உள்ள சுற்றுலா மாளிகைக்குள் வராமல் தடுக்க தீ மூட்டி காவல் காத்தனர். பின்னர் காலையில் அங்கிருந்து சென்ற காட்டு யானை, தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை நகர பகுதியில் அதிகரித்து வரும் காட்டு யானைகள் நடமாட்டம் அப்பகுதி பொதுமக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.