நீலகிரி: உதகையில் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் தாத்தா நகர் வளமான சாண்டா கிளாஸ் ஊர்வலம் நடைபெற்றது.
நீலகிரி: உதகையில் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் தாத்தா நகர் வளமான சாண்டா கிளாஸ் ஊர்வலம் நடைபெற்றது.
அன்பு அமைதி மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடித்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும் இயற்கை சீற்றத்திலிருந்து மாவட்டம் எந்த ஒரு பாதிப்பும் இல்லாதவாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தாத்தா நகர் வளமான சாண்டா கிளாஸ் உதகையில் நடைபெறுகிறது.

இதில், கிறிஸ்து பிறப்பை வலியுறுத்தும் வகையில் குழந்தைகள் வேடமிட்டு கலந்து கொண்டனர். மேலும், மான் ரதத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா உற்சாகமாக நடனம் ஆடி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி குதூகலப் படுத்தினார்.

மத்திய பேருந்து நிலையத்தில் துவங்கிய சாண்டா கிளாஸ் பேரவையானது ஆராதனைகளுடன் மத்திய பேருந்து நிலையம் மார்க்கெட் சேரிங் கிராஸ் என முக்கிய வீதிகள் வழியே அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தை சென்றடைந்தது. இந்த பேரணியை சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்.