பாலியல் சம்பவங்களை தடுக்க மாணவிகளுக்கு தற்காப்பு கலையை கற்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை

திருப்பூர்: பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்க மாணவிகளுக்கு தற்காப்பு கலையையும் கற்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்தார்.

திருப்பூர்: பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்க மாணவிகளுக்கு தற்காப்பு கலையையும் கற்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்தார். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த தெக்கலூரில் அமைந்துள்ள தனியார் பினன்லாடை நிறுவன பெண் ஊழியர்கள் கல்விப் பிரிவின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் நேற்று, டிசம்பர் 15 ஆம் தேதி கலந்து கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், "பெண்களால் முடியாது என இந்த உலகில் எதுவும் கிடையாது, பெண்கள் இந்த காலத்தில் சிக்கல் மட்டுமல்ல நக்கல்ளையும் சந்திக்கிறார்கள். அதையும் தாண்டி தூணிச்சலோடு சாதிக்க வேண்டும்."

தெலுங்கானா மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர். "மொட்டுக்களை மலரவிடுங்கள் பூத்துக் குலுங்கட்டும் கருக்கி விடாதீர்கள் என கோரிக்கை விடுத்திருந்தேன். கோரிக்கை வைக்கும் அளவு நாம் தாழ்ந்நதவர்கள் அல்ல, எனவே யோகாவுடன் பெண்கள் தற்காப்பு கலைகளையும் கற்க வேண்டும். தவறான எண்ணம் கொண்டு அணுகுபவர்களிடமிருந்து தற்காத்து கொள்வதுடன் அவர்களை ஒழிக்கவும் உதவும்.. தமிழக அரசு மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளையும் கற்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நான் மிக சாதாரண பெண் ஆனால் கொடுத்த வேலையை முழுமையாக செய்து முடிக்கும் அசாதாரண பெண். அதள பாதாளத்தில் விழுந்த காது கேட்காத தவளை பிறரின் மனச்சோர்வு பேச்சுக்களை கேட்காமல் மேலே வந்த கதையை போல வேண்டாத கேலி பேச்சுகளை கேட்காமல் இருந்தால் நாம் மேலே வரலாம். என பேசினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...