கோவை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கான 12 வது சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் இன்று துவங்கியது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் கலந்து கொண்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தமிழக கோவில் மற்றும் திரு மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் முதலாவது முகாம் துவங்கப்பட்ட நிலையில் மலைப்பாதை போக்குவரத்தும் மலைப்பகுதியில் நிலவும் தட்பவெட்ப நிலையை காரணமாக யானைகள் சிரமப்படும் என்ற காரணத்தினாலும் இந்த முகமானது கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தில் பவானி ஆற்றின் படுகையில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 12 வது புத்துணர்வு முகாம் இன்று துவங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது. முகாமை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ரிப்பன் வெட்டி யானைகளுக்கு பழங்கள் கொடுத்து துவக்கி வைத்தார்.
"யானைகளுக்கு 48 நாட்கள் முழு ஓய்வு உணவாக பசுந்தீவனங்கள் பாசிப்பயிறு கொள்ளு அரிசி போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்டஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளது. தினமும் நடைபயிற்சி ஷவர் குளியல் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளது", என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி கூறினார்.