தமிழ்நாடு உணவு பாதுகாப்பு தரச்சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோருக்கு அபராதம்‌ - மாவட்ட ஆட்சியர்‌ எச்சரிக்கை

கோவை: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு தரச்சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோர்‌ மீது அனைத்து விற்பனையாளர்கள் மற்றும்‌ தயாரிப்பவர்கள்‌ மீது அபராதம்‌ விதிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆப., அவர்கள்‌ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு தரச்சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோர்‌ மீது அனைத்து விற்பனையாளர்கள் மற்றும்‌ தயாரிப்பவர்கள்‌ மீது அபராதம்‌ விதிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆப., அவர்கள்‌ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு உணவுப்‌ பாதுகாப்பு மற்றும்‌ மருந்து நிர்வாகத்‌ துறை ஆணையர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலருக்கு உணவு பாதுகாப்பு தர சட்ட விதிகளை மீறும்‌ உணவு வணிகர்களுக்கு அபராதம்‌ விதிப்பதற்கு உணவு பாதுகாப்பு சட்டப் பிரிவு 69-ன்‌ கீழ்‌ அதிகாரம்‌ வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது,

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உணவு பாதுகாப்பு தரச்சட்டம்‌ தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, ரூ.12,00,000/- பன்னிரண்டு லட்சத்திற்கு கீழ்‌ உணவு வணிகம்‌ செய்பவர்கள்‌ உணவு பாதுகாப்பு சட்ட பிரிவுகள்‌ 50,52,54,55,56.57, மற்றும்‌ 58 ஆகியவற்றை முறையாக கடைபிடித்து நடக்கவேண்டும்‌. அவ்வாறு மீறும்‌ விற்பனை தாரர்கள்‌ மீது உணவு பாதுகாப்பு துறையினரின்‌ நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டு அபராதம்‌ விதிக்கப்படும்‌. அவ்வாறு விதிக்கப்பட்ட அபராத தொகையினை மூன்று வேலை நாட்களுக்குள்‌ செலுத்துச்சீட்டு மூலம்‌ (AN - Food Safety Wing- 0210-04-800-AN-2919) என்ற தலைப்பில்‌ அரசு கணக்கில்‌ அபராத தொகையினை வங்கியில்‌ செலுத்த வேண்டும்‌, தவறும்‌ பட்சத்தில்‌ உணவு வணிகத்தின்‌ பதிவுச் சான்று தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு, உணவு வணிகம்‌ செய்வது நிறுத்தி வைக்கப்படும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ அவர்களால்‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி உணவு பாதுகாப்பு தரங்கள்‌ சட்டம்‌ 2006-ன்கீழ்‌ 50,52,54,55,56,57.1(1), மற்றும்‌ 58 பிரிவுகளின்படி ஆண்டிற்கு ரூ.12,00,000,/-கும்‌ கீழ்‌ கொள்முதல்‌ விற்பனை மேற்கொள்ளும்‌ உணவு வணிகர்கள்‌ பதிவுச் சான்று பெற்றுள்ள, சிறு/குறு தயாரிப்பாளர்களுக்கு முதல்‌ முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 3,000/-ம்‌, இரண்டாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 6,000/“ம்‌ மற்றும்‌ மூன்றாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 10,000/-ம்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்‌, மூன்று முறைக்கு மேல்‌ அதே குற்றத்தில்‌ ஈடுபடும்‌ விற்பனைதாரர்களின்‌ பதிவுச்சான்று உரிமம்‌ இரத்து செய்யப்படும்‌ .

அதுபோலவே, சிறு மளிகை கடைகள்‌, நடமாடும்‌ உணவு வணிகர்கள்‌ தற்காலிகமாக கடை நடத்துபவர்களுக்கு (உதாரணம்‌-தள்ளு வண்டி கடைகள்‌, பெட்டி கடைகள்‌) முதல்‌ முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ.1,000,/-ம்‌, இரண்டாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ.2,000/-ம்‌ மற்றும்‌ மூன்றாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ.5,000/-ம்‌ மற்றும்‌ அவர்களின்‌ பதிவுச்சான்று உரிமம்‌ ரத்து செய்யப்படும்‌.

நாள்‌ ஒன்றுக்கு 500 லிட்டருக்குள்‌ பால்‌ விற்பனை செய்பவர்களுக்கு (பால்காரர்கள்‌ மற்றும்‌ சிறு பால்‌ விற்பனை நிலையங்கள்‌) முதல்‌ முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 2,000,/-ம்‌, இரண்டாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 4,000/-ம்‌ மற்றும்‌ மூன்றாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ.10,000,/-ம்‌ மற்றும்‌ அவர்களின்‌ பதிவுச்சான்று உரிமம்‌ ரத்து செய்யப்படும்‌.

நாள்‌ ஒன்றுக்கு 2 பெரிய விலங்குகள்‌,/10 சிறிய விலங்குகள்‌ (அ) 50 பறவை இனங்களை விற்பனை செய்யும்‌ இறைச்சி விற்பனையாளர்களுக்கு:- அதாவது (ஆடு/மாடு /கோழி/ மீன்‌ விற்பனையாளர்கள்‌) முதல்‌ முறை, குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 2,000/-ம்‌, இரண்டாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 4,000/-ம்‌ மற்றும்‌ மூன்றாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 10,000/-ம்‌ மற்றும்‌ அவர்களின்‌ பதிவுச்சான்று உரிமம்‌ ரத்து செய்யப்படும்‌.

மேலும்‌, உணவு பாதுகாப்பு தரங்கள்‌ சட்டம்‌ 2006ன்‌ கீழ்‌ 58 பிரிவுகளின்‌ படி: பதிவுச் சான்று பெறாமல்‌ உணவு வணிகம்‌ செய்யும்‌ வணிகர்களுக்கு முதல்‌ முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ.5,000/- மற்றும்‌ அவர்களுக்கு பதிவுச்சான்று உரிமம்‌ வழங்கப்பட வேண்டும்‌.

பதிவுச்சான்று உரிமம்‌ பெற்றவர்கள்‌ மற்றும்‌ பெறாதவர்கள்‌ தடைசெய்யப்பட்ட உணவு பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ உணவு வணிகர்களுக்கு (தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்‌ / பழைய செய்தி தாளில்‌ உணவு பொட்டலபிடுதல்‌) முதல்‌ முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 5,000/-ம்‌ இரண்டாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ.10,000,/-ம்‌ மற்றும்‌ மூன்றாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 25,000/- மற்றும்‌ அவர்களின்‌ பதிவுச்சான்று உரிமம்‌ ரத்து செய்யப்படும்‌ என்றும்‌ அனுமதியற்ற (Non Food Grade) பிளாஸ்டிக்‌ பொருட்களை கொண்டு உணவுப் பொருட்களை பொட்டலமிடும்‌ உணவு வணிகர்களுக்கு முதல்‌ முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ.2,000/-ம்‌ இரண்டாவது முறை குற்றத்திற்கான அபராத தொகையாக ரூ. 5,000ம்‌ மற்றும்‌ மூன்றாவது முறை குற்றத்திற்காக ரூ.10,000,/-மற்றும்‌ அவர்களின்‌ பதிவுச்சான்று உரிமம்‌ ரத்து செய்யப்படும்‌.

முதல்‌ முறை குற்றம்‌ என்பது உணவு பாதுகாப்பு தரங்கள்‌ சட்டப்படி நோட்டீஸ்‌ வழங்கப்பட்டு அதற்கான கால அவகாசத்திற்குப் பின்னர்‌ மறு கள ஆய்வின்‌ போது விதிகளை மீறும்‌ உணவு வணிகர்களுக்கு முதல்‌ முறையாக குற்றத்திற்கான அபராதம்‌ நேரடி கள ஆய்வின்‌ போதே விதிக்கப்படும்‌.

மேலும்‌ உணவுப் பொருட்களின்‌ கலப்படம்‌, கலப்பட டீதூள்‌, கலப்பட எண்ணெய்‌, அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமி (0௦1௦ம) கலந்த உணவுப் பொருட்கள்‌, தரமற்ற உணவு, தரம்‌ குறைவு, தப்பு குறியீடு மற்றும்‌ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்‌ போன்ற புகார்களுக்கு வாட்ஸ்‌ அப்‌ எண்‌ 9444042322 என்பதினை தொடர்பு கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில்‌

மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...