கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களில் இந்த ஆண்டு குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை துவங்குகிறது.
கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களில் இந்த ஆண்டு குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை துவங்குகிறது.

இதனை முன்னிட்டு கணக்கெடுப்பில் ஈடுபடும் வன ஊழியர்கள். தன்னார்வலர்களுக்கு வால்பாறை அட்டகட்டியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பயிற்சி மையத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் விலங்குகளை எப்படி கணக்கெடுப்பது, எப்படி, எவ்வாறு கையாள்வது, வன விலங்குகளான புலிகள் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளை நேரில் பார்த்து குறிப்பெடுப்பது மரங்களில் நகக்கீறல்கள், எச்சங்கள் இவற்றை வைத்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுக்கும் பணியில் 64 குழுக்கள் ஈடுபடுகின்றனர். இதில் வனத்துறை ஊழியர்கள் தன்னார்வலர்கள் என மொத்தம் 230 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த பயிற்சியில் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, உதவி தலைமை வன பாதுகாவலர் செல்வம், தனி உதவியாளர் முரளீதரன், வனச்சரகர்கள், வனவர்கள், மற்றும் அலுவலர்கள் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தன்னார்வலர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கணக்கெடுப்பிற்குத் தேவையான உபகரணங்கள் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.