நீலகிரி: சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது போல் தற்போது தமிழக அரசானது நீலகிரி மாவட்டத்தையும் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உதகையில் தெரிவித்தார்...

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செயற்கை முறையில் விவசாயம் செய்வதனால் அதிக பூஞ்சானக் கொல்லி மருந்துகள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளை உண்பதால் நமக்கு பல்வேறு நோய் உபாதைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. அதனால் இயற்கை விவசாயத்தை அதிக அளவில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு தனி விலையை கொடுக்க முன்வர வேண்டும் எனவும் அப்போது மட்டுமே இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் அதிக அளவில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவர் என கூறினார்.
தற்பொழுது வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், குறுகிய கால சாகுபடியாக வெங்காயம் இருந்து வருகிறது எனவும் சரியான விலை கிடைக்காத பொழுது விவசாயிகள் அதை சமாளித்து வந்தனர். ஆனால், தற்பொழுது இறக்குமதி செய்யும் அளவிற்கு வெங்காயம் இருந்து வருகிறது என தெரிவித்தார்.
மேலும், இன்று அரசியலுக்கு வந்துள்ள நடிகர்களும், வர துடிக்கின்ற நடிகர்களும் 2021ம் ஆண்டில் கள் இயக்கத்துடன் இணைந்து ஆதரவாக செயல்பட்டால் அவர்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.