கோவை:கோவை மேட்டுப்பாளையம் அருகே காரமடை மேம்பாலத்தில் கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேட்டுப்பாளையம் சேரன் நகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜேஷ், ஹேமலதா, ரேஷ்மா, சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேர் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஆம்னி காரில் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், கார் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மேம்பாலத்தில் சென்ற போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த ராஜம் என்ற தனியார் பேருந்து ஆம்னி காரின் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இ மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காரமடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேருந்து அப்பகுதியில் தொடர்ச்சியாக அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.