கலப்பட தேயிலை தூள் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை - தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர்

நீலகிரி: கலப்பட தேயிலை தூள் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி எச்சரித்துள்ளார்.

நீலகிரி: கலப்பட தேயிலை தூள் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி எச்சரித்துள்ளார்.



நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலையை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக படுக இன மக்களில் பெரும்பாலானவர்கள் தேயிலை தொழில் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டு காலமாக பச்சை தேயிலைக்கு உரிய விலைக் கிடைக்காமல் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் சமீப காலமாக கலப்பட தேயிலை உற்பத்தியில், சில தனியார் தேயிலை தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ளது.



குறிப்பாக மே மாதம் 24ம் தேதி 5 டன் கலப்பட தேயிலை கோத்தகிரியில் பிடிபட்டது. இதே போன்று ஜூன் 14ம் தேதி சாயம் கலந்த கலப்பட தேயிலை தூள் 40 டன் தனியார் தேயிலை தொழிற்சாலையில் பிடிபட்டது. இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலப்பட தேயிலை உற்பத்தி காரணமாக தேயிலை தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதுடன், தேயிலைக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில், தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தில் அதன் செயல் இயக்குனர் பேசுகையில், இதுவரை 17 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கலப்பட தேயிலையை ஏல விற்பனைக்கு அனுமதித்த ஏல நிறுவனத்திற்கு தற்காலிக தடைவிதித்துள்ளதாகவும், தொடர்ந்து கலப்பட தேயிலை தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...