நீலகிரி: நீலகிரியில் மே மாத கோடைக்கால சீசனுக்காக பூங்காக்களை தயார்ப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வரும் மே மாதம் நடக்கவுள்ள கோடை விழாவிற்காக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரிப் பூங்கா, சிம்ஸ் பூங்கா, உள்ளிட்ட பூங்காக்களில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.

மலர் கண்காட்சியின் போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். மலர் கண்காட்சி தினத்தன்று அந்த தொட்டிகள் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அழகான வடிவங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். மேலும், பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ள பல லட்சம் மலர் செடிகளில் ஏப்ரல் மாதம் முதல் மலர்கள் பூக்க துவங்கிவிடும்.

இதற்காக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் விதைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விதை விதைக்கும் பணிகள் துவங்கி தற்போது முடிந்த சூழலில், 6 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளான பெகோனியா, ரெகன்கிளாசம், வால்சம், சோலியாஸ், லிசியந்தால், சால்வியா மற்றும் டென்பீணம் ஆகிய வகைகளைச் சேர்ந்த மலர் நாற்றுகள் தாவரவியல் பூங்காவில் உள்ள நர்சரியில் தயார் நிலையில் உள்ளது. டெல்பீனியம், சால்வியா, ஹெர்மினா, ஹோலிஆக், வென்டர் ஹைனஸ் ஆகிய மலர் செடிகளின் நாற்றுக்கள் இத்தாலியன் பூங்கா நர்சரியில் நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளது.
தற்போது நாற்றுகள் தயாரான நிலையில், , பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகள், பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகள் சீரமைக்கப்பட்டு நாற்று நடவு பணிகளுக்காக தயாராக உள்ளது. டிசம்பர் மாதத்தில் துவங்கி நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை வளரும் மலர் செடிகளை நடவு செய்யும் பணிகள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருகிறது.