கோவை: மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை துவங்க உள்ள நிலையில் முகாமிற்கு யானைகள் வரத்துவங்கியுள்ளன. முதலாவதாக ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை முதலாவதாக வந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப் படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை காலை துவங்குகிறது.
இந்த முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து திருக்கோவில் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான 27 யானைகள் பங்கேற்க உள்ளன, கோவில்களில் ஆண்டு முழுவதும் ஆலய பணிகளை மட்டும் மேற்கொள்ளும் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் அடர்ந்த மலைகளின் நடுவே இயற்கையான சூழலில் 48 நாட்கள் இந்த புத்துணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.
தேக்கம்பட்டியில் பவானி ஆற்றின் படுகையில் 5 ஏக்கர் பரப்பளவில் யானைகள் கட்டும் இடம், உணவு தயாரிக்கும் இடம், பாகன்கள் தங்கும் இடம், யானைகள் குளிக்க சவர் பாத் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில் யானைகளுக்கு பசுந்தீவனம், கலவை சாதம், ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ பரிசோதனை, நடைபயிற்சி என யானைகளின் உடல் நலனை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாமில் பங்கேற்க முதலாவதாக ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமாலிகா முதலாவதாக வந்து சேர்ந்தது. யானைகள் முகாம் அமைந்துள்ள தேக்கம்பட்டி பகுதிக்கு வருவதற்கு முன்பே யானைகளின் உடல் எடைகள் சரிபார்க்கப்பட்டு முகாமிற்குள் அனுமதிக்கப்பட்டன. இன்று மாலைக்குள் அனைத்து யானைகளும் முகாமிற்குள் வந்து சேரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை காலை 9 மணிக்கு அறநிலையத்துறை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ்.பி வேலுமணி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று முகாமினை துவக்கி வைக்க உள்ளனர். 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் யானைகளை பராமரிப்பது குறித்து பாகன்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.