திருப்பூர்: திருப்பூர் அருகே வயதான தம்பதியரை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால், தம்பதியினர் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி சித்தநாயக்கன்பாளையம் சேர்ந்த காளிமுத்து (80), காப்பாத்தாள் (75) தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தங்களை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாததால் சோகத்தில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் மருத்துவமனைக்குச் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளனர். ஆனால், நேற்று மதியம் வரை அவர்கள் வீடு திரும்பவில்லை என அக்கம்பக்கத்தினர் அவர்களது மகள்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் திருப்பூர் மாவட்ட காமநாயக்கன்பாளையம் எல்லைக்குட்பட்ட குள்ளம்பாளையம் அருகே பிஏபி வாய்க்காலில் கிடந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வயது முதிர்ந்த காலத்தில் கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாததால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.