கோவை: இந்தியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் தேவை உள்ளதாக கோவையில் சிஏ மாணவர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில் ஐ.சி.ஏ.ஐ. யின் முன்னாள் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் முக்கிய அமைப்பான “போர்ட் ஆஃப் ஸ்ட்டீஸ்” என்னும் அமைப்பு சார்பில், சிஏ மாணவர்களுக்கான இரண்டு நாள் மாநாடு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியில் தொடங்கியது
சிஏ மாணவர்களுக்கான இந்த மாநாட்டை ஐசிஏஐயின் போர்ட் ஆஃப் ஸ்ட்டீஸ், ஐசிஏஐயின் கோவை கிளையோடும், ஐசிஏஐயின் கோவை கிளை மாணவர்கள் அமைப்போடும் இணைந்து நடத்தியது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து 1000க்கும் மேற்பட்ட சிஏ மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு ஐசிஏஐயின் முன்னாள் தலைவர் ஆடிட்டர் ஜி.ராமசாமி தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து சிஏ மாணவர்கள் நேரடி வரிகள், மறைமுக வரிகள், ஜி.எஸ்.டி, ஆடிட்ங் ஸ்டேண்டர்டஸ், அக்கவுண்டிங் ஸ்டேண்டர்டஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த தலைப்புகளில் உரையாற்றினர். மாணவர்களின் உரைகளுக்கு நாட்டின் தலைசிறந்த ஆடிட்டர்கள் தலைமையேற்று வழி நடத்தினர். தொடர்ந்து
ஐசிஏஐயின் முன்னாள் தலைவர் ஆடிட்டர் ஜி.ராமசாமி கூறுகையில், இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். இந்தியாவில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர். தற்போது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டை கணக்காளர்களின் தேவை உள்ளது. மேலும், ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளை கையாள பட்டயக் கணக்காளர்கள் தேவை அதிகம் உள்ளது. மேலும் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு பெண் பட்டயக் கணக்காளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பொறியியல் கல்லூரி மாணவர்களும், பட்டய கணக்காளர் படிப்பினை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்றார்.
ஐசிஏஐயின் மத்திய நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் எம்.பி.விஜய் குமார், ஜி.சேகர், ஐசிஏஐயின் முன்னாள் தலைவர்கள் ஆடிட்டர்கள் ஆர்.பூபதி, எஸ். ரகு, பி.சரவண பிரசாத், கே.இரவி மற்றும் கமல் கர்க் ஆகியோர் மாணவர்களின் உரைக்கு தலைமையேற்று வழி நடத்துகின்றனர். இதை தவிர ஆடிட்டர்கள் கே.பத்ரிநாராயணன், சந்திப் சபாபதி, அனிஷ் சந்திரசேகர் மற்றும் சர்வஜித் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர். வருமானவரித்துறை ஆணையர் வி. எஸ். குமார் அவர்கள் மாணவர்கள் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் வகையில் பேசினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் திரளாக மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை ஐசிஏஐயின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆடிட்டர்கள் பி.இராஜேந்திர குமார், பாபு அபிரகாம் கள்ளிவாயலில், ஐசிஏஐயின் தென் மண்டல செயலாளர் ஆடிட்டர் கே.ஜலபதி, கோவை கிளை தலைவர் ஆடிட்டர் பி. பாலசுப்ரமணி, செயலாளர் ஆடிட்டர் எஸ்.பிரபு, சிஏ மாணவர்கள் அமைப்பு தலைவர் ஆடிட்டர் டி.நாககுமார் மற்றும் ஐசிஏஐயின் கோவை கிளை உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.