கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், வடவள்ளி பகுதியில் மூன்று சந்தன மரங்களை வெட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல்காரர்களை கண்காணிக்க போலீசார் இரவு ரோந்து பணிகள் மேற்கொண்டும் இவர்களின் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

மேலும், இவர்கள் காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்எஸ்புரம் காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மரத்தை வெட்டி கடத்திய கடத்தல்காரர்கள் தற்போது சிங்காநல்லூர் காவல் எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரக்கட்டைகளை கடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சிங்காநல்லூர் பகுதியில் போலீஸ் ரோந்து பணிகள் அதிகப்படுத்தியதையடுத்து வேறு பகுதிகளை குறிவைத்து தங்களின் வேட்டையை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படியிருக்க வடவள்ளி அருகே வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பில் சந்தன மரக் கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடவள்ளி காவல் எல்லைக்குட்பட்ட மருதமலை அடிவாரப் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான வன குடியிருப்பு உள்ளது.
இந்த பகுதியில் தேக்கு மற்றும் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது .இந்த குடியிருப்பில் உள்ள ஊழியர்கள் நேற்று இரவு யானை விரட்டும் பணிக்கு சென்ற நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சந்தன மரம் கடத்தியவர்கள், வன ஊழியர்கள் யானை விரட்ட செல்வார்கள் என்பதை அறிந்து அதன்படி திட்டமிட்டு இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதும் தெரியவந்துள்ளது.